Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி நிலங்கள், சுல்தானின் நிலங்களாக பரிந்துரை
அரசியல்

ஓராங் அஸ்லி நிலங்கள், சுல்தானின் நிலங்களாக பரிந்துரை

Share:

ஜோகூர் மாநிலத்தில் ஓராங் அஸ்லி பூர்வகுடி மக்களின் நிலங்கள் சுல்தானின் மேற்பார்வைக்குரிய நிலங்களாக வகைப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், Sultan Ibrahim Sultan Iskandar பரிந்துரை செய்துள்ளார். பூர்வகுடி மக்களின் நிலங்கள், நடப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் உடமையாக தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக சுல்தான் விளக்கினார்.

பூர்வகுடி மக்களின் நிலங்கள் மற்றும் அவர்களின் எல்லைப்பகுதிகள், காலஞ்சென்ற சுல்தான் அபு பாக்கார் காலத்திலிருந்து மாநில அரசாங்கமே முடிவு செய்கிறது.
அதேவேளையில் தற்போது அமலில் உள்ள சுல்தான் உரிமைக்குரிய நில சட்டமும், பூர்வகுடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க அணுக்கமாக கண்காணித்து வரும் என்று சுல்தான் தெளிவுபடுத்தினார்.

Related News