Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பகல் கனவு காண்கிறது ​பெரிக்காத்தான் நேஷனல்
அரசியல்

பகல் கனவு காண்கிறது ​பெரிக்காத்தான் நேஷனல்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக வீற்றிருக்கும் 14 தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என்று அறிவித்துள்ள டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான அந்த கூட்டணி பகல் கனவு காண்கிறது என்று அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அதனை நனவாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது போன்ற நிறைவேறாத கனவை கண்டு, அற்ப மகிழ்ச்சி அடைவதைக் காட்டிலும் நிம்மதியாக உறங்குங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களுக்கு அகமட் ஜாஹிட் அறிவுறுத்தினார்.

Related News