புத்ராஜெயா, செப்டம்பர்.02-
பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளான மஇகாவையும், மசீச.வையும் வளைப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தூண்டில் போடுகிறது என்பதை அந்தக் கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி ஒப்புக் கொண்டுள்ளார்.
இருப்பினும் அவ்விரு கட்சிகளுக்கும், பெரிக்காத்தான் நேஷனல் வழங்க முன் வந்துள்ள அனுகூலங்கள் ஆதாயத்தைத் தர வல்லதா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
மசீச.வும், மஇகாவும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அழைப்பு விடுத்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் துணைப்பிரதமரான அஹ்மாட் ஸாஹிட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.