விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை சீரமைப்பில் பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான மஇகா மற்றும் மசீச.விற்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கோடி காட்டப்பட்டுள்து.
வரும் அக்டேபார் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகாங், பெலாங்ஙாய் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளவிருக்கும் ஒற்றுமை அரசாங்க அமைச்சரவை மறு சீரமைப்பில் முதல் முறையாக மஇகாவிற்கும், மசீச.விற்கும் இடம் அளிக்கப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃப்எம்தி செய்தி வெளியிட்டுள்ளது.மஇகாவிற்கும் மசீச.விற்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுமானால் மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா எம்.பி.யுமான டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் மசீச. தேசியத் தலைவரும், லாபிஸ் எம்.பி.யுமான டாக்டர் வீ கா சியோங் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மஇகாவிற்கும் மசீச.விற்கும் அமைச்சர் பதவி வழங்கப்படுவது தொடர்பில் அண்மையில் உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றறதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக சற்று காத்திருங்கள் என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.







