பாஸ் கட்சி அரசாங்கத்தை ஆள நினைக்கின்றது; அரசாங்கம் பாஸ் கட்சியை ஆள நினைக்கக்கூடாது என ஷா ஆலாமில் நடைபெற்ற 69வது முக்தாமார் கருத்தரங்கத்தில் பாஸ் கட்சியின் அல்-முர்சிதுல் பொது பிரிவின் பொறுப்பாளர் டத்தோ ஹாஷிம் ஜாசின் இவ்வாறு தெரிவித்தார்.
நடப்பு அரசாங்கம் தங்களின் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்து பயணிக்க பாஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்திருத்தப்போதிலும், பின்னர் அதற்கான பதிலையும் அவர்களிடம் பகிர்ந்த பின்னரும், தொடர்ந்து பாஸ் கட்சி , இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க காரணம் உண்டு. தற்பொழுது பாஸ் கட்சி 4 மாநிலங்களில் ஆட்சி செய்து வருவதால், நிச்சயம் அடுத்த பொது தேர்தலின் போது, அது நாட்டை ஆளும் என்ற நம்பிக்கை இருப்பதால், ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் இணைந்து தங்களைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என அவர் கூறினார்.








