மலாக்கா, ஜூலை.12-
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து இருக்காமல் பாரிசான் நேஷனல் தனியாகப் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு பாரிசான் நேஷனல் இரண்டு சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றாலும் பாரிசான் நேஷனலும் அம்னோவும் எடுக்கக்கூடிய முடிவுகள் கட்சிக்கு நன்மையே கொண்டு வரும் என்று அம்னோ துணைத் தலைவருமான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.