Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஊழலுக்கு வித்திடும் GLC இல் அரசியல் நியமனங்கள் வேண்டாம்
அரசியல்

ஊழலுக்கு வித்திடும் GLC இல் அரசியல் நியமனங்கள் வேண்டாம்

Share:

GLC எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனங்களில் அரசியல் வாதிகள் நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் வாதிகள் தங்களின் அரசியல் நலனுக்காகவும், தனிப்பட்ட சுயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் அந்தப் பதவிகளை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடும் என்று மலேசியாவில் நிரூபிக்கப்பட்டிருப்பதால், அது போன்ற தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம் என்று பொருளாதார நிபுனர் dr edmund terence gomez வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அரசியல் நியமனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊனப்படுத்துவிடும் என்பதுடன் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வித்திடும் என்று edmund terence எச்சரித்தார்.
நாட்டில் 6 மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தல்கள் நடைபெறும் நிலையில், UMNO வின் பொதுச் செயலாளர் dr asyraf wajdi dusuki, கல்விக்கும், வர்த்தகத்திற்கும் தளமாகக் கொண்ட MARA வின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் edmund terence இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார்.

Related News