ஈப்போ, மே.19-
பிகேஆர் தேர்தலை வழிநடத்துவதற்கு மிகக் கமக்கமாக வியாபாரியை நியமித்து இருக்கிறார்கள் என்று கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தலை வழிநடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள அந்த வியாபாரி குறித்து முன்னதாக விவாதிக்கப்படவில்லை என்று ரஃபிஸி ரம்லி விளக்கினார்.
அனைத்தும் முறைப்படி நடக்க வேண்டும் என்று வாய் கிழிய பேசும் நாம், ஒரு தேர்தலை வழிநடத்துவதற்கு நியமிக்கப்பட்ட வியாபாரி குறித்து ஏன் முக்கியப் பொறுப்பாளர்களுடன் விவாதிக்கப்படவில்லை என்று ரஃபிஸி ரம்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வியாபாரி, திறன், நம்பகத்தன்மை, ஆற்றல் குறித்து கட்சியின் அரசியல் பிரிவிடம் கலந்து ஆலோசிக்கப்படாமல் தன்மூப்பான முறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ரஃபிஸி ரம்லி குற்றஞ்சாட்டினார்.