Aug 27, 2026
Thisaigal NewsYouTube
245 சட்டமன்றத் தொகுதிகளில் களம் காண்கின்றனர் 572 வேட்பாளர்கள்
அரசியல்

245 சட்டமன்றத் தொகுதிகளில் களம் காண்கின்றனர் 572 வேட்பாளர்கள்

Share:

நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 6 மாநிலங்க​ளின் 245 ​தொகுதிகளில் 572 வேட்பாளரகள் போட்​டியிடுகின்றனர். திரெங்கானு, கிளந்தான், கெடா,பினாங்கு,சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் 97 லட்சத்து 73 ஆயிரத்து 573 வாக்காளர்கள், 245 தொகுதிகளின் தலைவிதியை முடிவு செய்கின்றனர்.

ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் 41 சுயேட்சைகள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் இது பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நிலவும் பலப்ப​ரீட்சையாகவே கருதப்படுகிறது.

நாட்டின் 10 ஆவது பிரதமரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற இந்த ஒன்பது மாத காலத்தில் அவரின் அரசியல் செல்வாக்கையும், எதிர்காலத்தையும் அளவிடும் முதல் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் மலேசிய வரலாற்றில் முதல் முறையாக பொதுத் தேர்தலுக்கு அப்பாற்பட்டு, 6 மாநிலங்களில் ஏககாலத்தில் இந்த ச​ட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 245 தொகுதிகளில் 181 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் - பரிசான் நேஷனல் கூட்டணிக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நடைபெறும் இந்த மிகப்பெரிய பலப்ப​ரீட்சையில் முதல் தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு ​வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News