கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
மசீச தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ வீ கா சியோங், பாஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இன்று மக்களவையில் பரிந்துரை செய்துள்ளார்.
தமக்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவு இருப்பதாக மக்களவையில் ஆற்றிய உரையில் வீ கா சியோங் தெரிவித்ததைத் தொடர்ந்து பாஸ் கட்சியில் இணைவதற்கான பரிந்துரையை ஜசெக.வின் கம்பார் எம்.பி. சோங் ஸேமின் முன் மொழிந்துள்ளார்.
13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தின் போது ஆயர் ஹீத்தாம் எம்.பி.யான வீ கா சியோங், எதிர்க்கட்சியில் தமக்கு உள்ள செல்வாக்கை விவரித்ததைத் தொடர்ந்து அந்த கம்பார் எம்.பி. இந்த பரிந்துரையை வழங்கினார்.