Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஜசெக புதிய பொறுப்பாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜசெக புதிய பொறுப்பாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

புத்ராஜெயா, மார்ச்.17-

நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக சுமூகமாக நடைபெற்ற ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பேராளர்களின் அபரிமித ஆதரவு பெற்று தேர்வு செய்யப்பட்ட கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைருமான டத்தோஸ்ரீ அன்வார் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

நாட்டிற்கான தொடர்ந்து கடுமையாக உழைக்கும்படி ஜசெக.வின் புதிய பொறுப்பாளர்களை டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார். இன்று திங்கிட்கிழமை கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், ஜசெக.வின் 2025 – 2028 பொறுப்பாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

ஜசெக.வின் தேர்தலில் இலக்கவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியே, கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வேளையில் கட்சியின் பொதுச் செயலாளராக அந்தோணி லோக் தனது பதவியை தற்காத்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →