Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சனூசிக்கு எதிராக நான்கு புகார்கள் பெறப்பட்டுள்ளன
அரசியல்

சனூசிக்கு எதிராக நான்கு புகார்கள் பெறப்பட்டுள்ளன

Share:

பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, தேச நிந்தனைக்கு ஆளாகியுள்ள கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு எதிராக போலீசார், நான்கு புகார்களை பெற்றுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ கௌவ் கொக் சின் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் இவ்விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்து வருவதாக கௌவ் கொக் சின் குறிப்பிட்டார்.

கெடா மந்திரி புசார், தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 505 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கௌவ் கொக் சின் தெரிவித்தார்.

Related News