Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்
அரசியல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ ஆசாம் பாக்கியின் பங்குகள் உரிமம் தொடர்பான விவகாரத்தில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க தலைமைச் செயலாளர் முடிவெடுப்பார் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சிறப்பு குழு தயாரித்த அறிக்கையானது, இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அட்டர்னி ஜெனரல் மேற்கொண்ட அவ்விசாரணை குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மேற்கொள்வார் என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டவைகளை தன்னால் வெளியிட இயலாது என்றும்ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டுள்ளார்.

Related News