Aug 28, 2026
Thisaigal NewsYouTube
இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்
அரசியல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

Share:

நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் இன்றைய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விவாதத்தில் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில், Attorney General உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்த முயற்சி செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போதைய நடைமுறைச் சட்டங்களைக் காட்டிலும் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, இனவாத பிரச்சினைகளைத் தூண்டுவோர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News