Jan 20, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது
அரசியல்

விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

Share:

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றதாக கூறப்படும் சூதாட்ட நிறுவனங்களின் பின்னணி மற்றும் பெறப்பட்ட தொகை தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை இயக்குநர் ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றுள்ளது என்பதற்கு ஆதராமாக முக்கிய ஆவணங்களுடன் கடந்த மே 30 ஆம் தேதி தனிநபர் ஒருவர் எஸ்.பி.ஆர்.எம். மில் புகார் செய்துள்ளதாக ஹிஷாமுடின் ஹஷிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News