Oct 18, 2025
Thisaigal NewsYouTube
MH370 விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
அரசியல்

MH370 விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்

Share:

மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்து, வரும் மார்ச் 8 ஆம் தேதியுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த விமானம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்குமானால் அதனை தேடும் பணி ​மீண்டும் முடுக்கி விடப்படும் என்று போக்குவர​த்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று உறுதி அளித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ​சீன தலைநகர் பெய்​ஜிங்கை நோக்கி புறப்பட்ட அந்த மலேசிய விமானம் காணாமல் போன மர்மம் தொடர்ந்து ​நீடிக்கும் நிலையில் இதனால் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள பாதிக்கக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரை ​தீர்க்க இயலாதது குறித்து தாம் மிகுந்த வருத்தம் கொள்வதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரில் மலேசியர்கள் அனைவரும் பங்கு கொள்வதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

MH370 விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் | Thisaigal News