மஇகா சக்தி வாய்ந்த கட்சியாக மாறும். யாரையும் நம்பி நாங்கள் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சூளுரைத்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் மஇகா சுயேட்சையாக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளது. யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் மஇகாவிற்கு இல்லை என்று தாப்பா எம்.பி.யான சரவணன் குறிப்பிட்ள்ளார்.
நேற்று கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய பிரிவுகளின் பேராளார் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய போது சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.
மஇகா யாரையும் நம்பிருக்க வேண்டிய அவசியம் ஒரு போதும் இருந்தது இல்லை. இதுதான் மஇகாவின் வலிமை. மஇகா உறுப்பினர்களின் ஒற்றுமையே இதற்கு மூலக் காரணம் என்று சவரணன் கூறியதாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.








