தெலுக் இந்தான், ஆகஸ்ட்.10-
கெடா, பினாங்கு மாநில மஇகா எடுத்த அதிரடி முடிவுகளைத் தொடர்ந்து, பேரா மாநில மஇகாவுக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லை எனப் பேரா மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ சராணி முகமட் Datuk கூறியுள்ளார். பேரா மஇகாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களுக்குள் நல்லுறவு நிலவுவதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மஇகாவுக்குச் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத போதும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கூட்டணியிலிருந்து வெளியேறினால், இந்தப் பதவிகளை அவர்கள் இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.