மக்களவைக் கூட்டத்திற்கு மட்டம் போடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் வரவில்லை எனும் காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ள உறிமை உண்டு என மூடா கட்சியின் தலைவர் ஷெட் செடிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அவ்வாறு செய்பவர்களின் பெயர்களை இணையத்தளத்தில் வெளியிடுமாறு சபாநாயகர் ஜொஹாரி அப்துல் முன்வைத்த பரிந்துரையை ஆதரரித்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான ஷெட் செடிக் , அவர்களின் சம்பளம் மக்கள் கொடுக்கும் பணம் என்பதை மறந்து விடக் கூடாது என்றார்.
மக்கள் பிரச்சனைகளை நாடாளூமன்றத்தில் விவாதித்து நல்ல தீர்வுகளைக் கொண்டு வருவதற்கே மக்களின் பணம் தமக்கும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஷெட் செடிக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராதக் காரணத்தை அறிந்து கொள்ள முழு உரிமை கொண்டிருக்கிறார்கள் என்றார்.








