Oct 18, 2025
Thisaigal NewsYouTube
டிஏபி யின் தவறான வழிகாட்டலினால் சீனர்களும், இந்தியர்களும் அலைகழிக்கப்படுகிறார்களாம் பாஸ் கட்சித் தலைவர் கூறுகிறார்
அரசியல்

டிஏபி யின் தவறான வழிகாட்டலினால் சீனர்களும், இந்தியர்களும் அலைகழிக்கப்படுகிறார்களாம் பாஸ் கட்சித் தலைவர் கூறுகிறார்

Share:

டிஏபி யை இலக்காக கொண்டு தொடர்ந்து கடுமையாக சாடி வரும் பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங், டிஏபியின் தவறான வழிகாட்டலினால் சீனர்களும், இந்தியர்களும் உந்தப்பட்டு வருகிறார்கள் என்பதை அந்த சமூகங்களின் இளைய தலைமுறையினர் உணர்ந்து இருக்கவில்லை என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட கட்சிதான் டிஏபி. ஆனால், சுதந்திரத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்ட மசீச மற்றும் மஇகாவை விழுங்கிவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கு துடித்த கட்சிதான் டிஏபி என்று ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.

இஸ்லாத்தை வலிந்து திணிக்காமல் நல்லிணக்கமான சூழலில் வேரூன்றிவிட்ட பல்லின சமூகத்தின் மத்தியில் இஸ்லாம் கூட்டரசு மதமானது என்றாலும் அந்தந்த சமூகத்தில் இனம், மொழி, கலாச்சாரத் தன்மைகள் பாதிக்கப்படாமல் சமய சுதந்திர உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியர்களுக்கே மலேசியா என்ற சுலோகம் மற்றும் மதச்சார்பினை நாட்டை உருவாக்கும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு டிஏபி பல்லின சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!