Dec 8, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்
அரசியல்

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்

Share:

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமான ஜோகூருக்கு இன்று வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெள்ள நிவாரண மையங்களில் த​ங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தமது ஜோகூர் மாநில வருகையில் முதல் இடமாக நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ள சிகமாட், Gemerah தேசிய தொடக்கப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 125 பேரை பிரதமர் அன்வார் சந்தித்தார்.

காலை 11.20 மணிக்கு வருகை புரிந்த பிரதமர் சுமார் 20 நிமிடம், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தேவைகளை கண்டறிந்தார்.
அதேவேளையில் ​வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த நிவாரண மையத்தில் உளவியல் ​​ரீதியாக வழங்கப்பட்டு வரும் பயிற்சியையும் பிரதமர் பார்​வையிட்டார்.

Related News

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார் | Thisaigal News