Jan 13, 2026
Thisaigal NewsYouTube
வெற்றிப் பெற்ற 30 தொகுதிகளுக்கு மேல் அம்னோ இலக்கு
அரசியல்

வெற்றிப் பெற்ற 30 தொகுதிகளுக்கு மேல் அம்னோ இலக்கு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.13-

கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றி பெற்ற 30 இடங்களைத் தாண்டி, வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட கட்சி இலக்கு வைத்துள்ளது என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் அம்னோ தோல்வியடைந்தாலும், இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளை 'இரண்டாம் நிலை' தொகுதிகளாகக் கட்சி கருதுகிறது. இத்தகைய தொகுதிகளில் மீண்டும் போட்டியிட அம்னோ ஆர்வம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெர்சத்து (Bersatu) கட்சி வசம் உள்ள தொகுதிகளில் அம்னோ போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அது ஒவ்வொரு தொகுதியின் தரவுகளையும் விரிவாக ஆய்வு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ளும் போது கட்சி தனது தனித்துவமான வியூகங்களைக் கொண்டிருக்கும் என்று ஸாஹிட் குறிப்பிட்டார்.

நாளை ஜனவரி 14 ஆம் தேதி அம்னோ பொதுப் பேரவை தொடங்கவிருக்கும் இவ்வேளையில் ஸாஹிட்டின் இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Related News

ஸாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்: அக்மால்

ஸாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சரின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்: அக்மால்

பெரிக்காத்தான் தலைவரைத் தேர்வு செய்ய சிறப்புப் பொதுக்கூட்டம் – ஹாடிக்கு முகைதீன் ஆதரவு

பெரிக்காத்தான் தலைவரைத் தேர்வு செய்ய சிறப்புப் பொதுக்கூட்டம் – ஹாடிக்கு முகைதீன் ஆதரவு

கூட்டணியில் விரிசல்? 'மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்' - பெர்சத்து கட்சியைச் சீண்டிய பாஸ் இளைஞர் அணி!

கூட்டணியில் விரிசல்? 'மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்' - பெர்சத்து கட்சியைச் சீண்டிய பாஸ் இளைஞர் அணி!

"சைஃபுடின் அப்துல்லா மீதான நடவடிக்கை நியாயமற்றது" - இந்திரா மாஹ்கோத்தா பெர்சாத்து தலைமை கண்டனம்

"சைஃபுடின் அப்துல்லா மீதான நடவடிக்கை நியாயமற்றது" - இந்திரா மாஹ்கோத்தா பெர்சாத்து தலைமை கண்டனம்

சபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு: கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி, லாமாக்கில் நேரடிப் போட்டி நிலவுகிறது

சபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு: கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி, லாமாக்கில் நேரடிப் போட்டி நிலவுகிறது

பேராக் பெர்சாத்து தலைவர்கள் பலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

பேராக் பெர்சாத்து தலைவர்கள் பலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்