Apr 19, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து
அரசியல்

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

Share:

பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 30 சிறார்கள் மற்றும் அவர்களது காப்பாளர்கள் இன்று மலேசிய நாடாளுமன்றத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டனர்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயரின் ஏற்பாட்டில் பேருந்து மூலம் வருகை தந்த இந்தச் சிறார்கள், நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை நேரடியாகக் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தச் சிறார்களை நேரில் சந்தித்து அன்புடன் வரவேற்றார்.

நாடாளுமன்றத்தின் உயரிய ஜனநாயகக் கடமைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைச் சிறுவயதிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறார்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன்கள் குறித்துக் கேட்டறிந்து உற்சாகப்படுத்தினார்.

தங்கள் தொகுதி எம்பி-யுடன் நாட்டின் மிக உயரிய பரிபாலனத்துக்கு வந்து பிரதமரைச் சந்தித்தது, ஆசிரமச் சிறார்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related News