பாஸ் கட்சியின் செய்திகளையும் அதன் செயல்பாடுகளையும் வெளியிட்டு வந்த ஹராக்கா நாளிதழின் முன்னாள் அச்சகத்தினர் , பாஸ் கட்சி இன்னும் கடன்களை அடைக்காமல் இருப்பது தங்களுக்கு பெருங்குறையாக இருப்பதாக N.A.J. Press Resources (M) Sdn Bhd ட்டின் உரிமையாளர் ஹுசின் ஜான் தெரிவித்தார்.
தங்களின் கடன்களை அடைக்காமல் பாஸ் கட்சியின் தலைவர்கள் சொகுசாக வாழ்வதைப் பார்க்கும் பொழுது தனக்கு வருத்தமாக இருப்பதாக அவர் மலேசியா கினி நாளிதழிடன் தெரிவித்துள்ளனர்.
7 ஆண்டுகள் கடந்தப் பின்னரும் கொடுக்க வேண்டிய 600,000 வெள்ளி கடனை அவர்கள் அடைக்காததால் தன்னுடைய நிறுவனம் மூடப்பட்டு நிலைக்கு தள்ளப்பட்டது என அவர் மேலும் கூறினார்.








