Jan 18, 2026
Thisaigal NewsYouTube
Janawibawa விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை
அரசியல்

Janawibawa விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை

Share:

பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட Janawibawa நிதி முறைக்கேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்ட விசாரணையில் யாருடைய தலையீடும், குறுக்கீடும் இல்லை என்று அந்த ஆணையம் இன்று விளக்கமளித்துள்ளது.


Janawibawa திட்டம் தொடர்பாக பல நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பெறப்பட்ட தகவல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இவ்விசாரணை நடைபெற்றதாக SPRM தெளிவுப்படுத்தியது.
விசாரணை முழுமைப்பெற்று, அதன் அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தின் ஆய்வுக்கும், பரிசீலனைக்கும் சமர்பிக்கப்பட்ட பின்னரே அவர்களின் உத்தரவிற்கேற்ப SPRM செயல்பட்டதாக அந்த ஆணையம் விளக்கமளித்துள்ளது.


Janawibawa நிதி முறைக்கேட்டில் சில முக்கியத் தலைவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பது, அரசியல் நோக்கம் கொண்டது என்றும், சில தரப்பினரின் தலையீடுகள் இருந்துள்ளன என்றும், கூறப்படும் குற்றச் சாட்டை SPRM முற்றாக மறுத்துள்ளது.

Related News