ஜோகூர் பாரு, ஜனவரி.28-
ஜோகூர் பெர்சாத்து கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு 14 கட்சிப் பிரிவுகளிலிருந்து வந்த கோரிக்கைகளை டாக்டர் சாஹ்ருடின் ஜமால் நிராகரித்துள்ளார்.
அப்பதவியில் தன்னை நியமித்தது பெர்சாத்து தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் என்பதால், முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே இருப்பதாகவும் சாஹ்ருடின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினருமான சாஹ்ருடினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த ஜோகூர் பெர்சாத்து கட்சியின் 14 பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.
இதற்கு முன்பு இந்த விவகாரம் முகைதீனிடம் எழுப்பப்பட்டதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








