May 3, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தது குறித்து ஜசெக தலைவர்கள் விமர்சனம்
அரசியல்

நீதிமன்றத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தது குறித்து ஜசெக தலைவர்கள் விமர்சனம்

Share:

சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் வேளையில், சட்ட சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் அங்கிருந்தததாகக் கூறப்படுவது, சட்ட அமைப்பின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக ஜசெக கட்சியைச் சேர்ந்த 4 தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர்களான ஷேக் உமர் பகாரிப் அலி, யாங் ஷெபூரா ஓத்மான்,ஷாரெட்ஸான் ஜோஹான், மற்றும் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சரீனா அப்துல் ரஷீத் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தில் அருண் துரைசாமி-ஐ குலசேகரன் சந்தித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

சட்ட சீர்திருத்த பொறுப்பில் உள்ள குலசேகரனின் இந்த செயலானது பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களையும், குறிப்பாக சட்ட அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அருண் துரைசாமிக்கு ஆதரவாக எடுக்கப்படும் எந்த ஒரு தனிப்பட்ட நடவடிக்கையும் ஜசெக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனிடையே, இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள குலசேகரன், நீதிமன்றத்திற்கு வெளியே சில நிமிடங்கள் மட்டுமே அருண் துரைசாமி-ஐ சந்தித்து சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு