Aug 28, 2026
Thisaigal NewsYouTube
வடகொரிய அதிபர் தேர்தலில் 99.93% வாக்குகளுடன் கிம் ஜோங் உன் அமோக வெற்றி
அரசியல்

வடகொரிய அதிபர் தேர்தலில் 99.93% வாக்குகளுடன் கிம் ஜோங் உன் அமோக வெற்றி

Share:

வட கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அந்நாட்டு நடப்பு அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93 விழுக்காடு வாக்குகளையும், அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு கம்யூனிச நாடான வடகொரியா, தனது சர்வாதிகாரப் போக்கால் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அணு ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பதற்றமான உறவுகளைக் கொண்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டும் முதல், ஒரே கட்சி ஆட்சி முறையுடன் அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில் வடகொரியா செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 687 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளர் மட்டுமே போட்டியிட்ட நிலையில், 99.93% வாக்குகளுடன் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News