எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கெமாமன் இடைத்தேர்தலின் போது, ஒற்றுமை அரசாங்கத்திற்கு உதவி செய்யும் எண்ணமாக ம இ கா அவர்களுடன் துணை நிற்கும் என மஇகா தேசிய தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறி உள்ளார்.
கெமாமன் தொகுதியில் அதிகமான இந்திய வாக்காளர்கள் இல்லாத நிலை இருந்தாலும் , ஒற்றுமை அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று ஆதரவு அளிக்கும் என அவர் மேலும் கூறினார்.








