கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக பெரிக்காத்தான் நேஷனலின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்று ஜசெக.வின் மாநில இளைஞர் பொறுப்பாளர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து கொண்டு அதற்கு எதிராகக் கோடாரி காம்பாக மாறியுள்ள அக்மால், பெரிக்காத்தான் நேஷனலின் ஏஜெண்டு என்று ஜசெக. இளைஞர் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
அதற்கு பதில் அளித்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால், உண்மையிலேயே பெரிக்காத்தான் நேஷனலின் ஏஜெண்டு தாம் என்றால், ஜசெக இளைஞர் பிரிவு யாருடைய ஏஜெண்டு என்று வினவியுள்ளார்.