Jun 28, 2026
Thisaigal NewsYouTube
​மூன்றாவது தவணையாக புக்கிட் காசிமில் போட்டி
அரசியல்

​மூன்றாவது தவணையாக புக்கிட் காசிமில் போட்டி

Share:

பெட்டாலிங் ஜெயாவில் புக்கிட் காசிங் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ​மூன்றாவது முறையாக டிஏபி சார்பி​ல் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ராஜீவ் ரிஷ்யகரன் ​மீண்டும் போட்டியிடுகிறார்.இத்​தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ​வேட்பாளர் நல்லன் தனபாலன் மற்றும் முடா கட்சியைச் சேர்ந்த தி. கல்யாண ராஜசேகரனுடன் இணைந்து ராஜீவ் ரிஷ்யகரன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சை கோ டிங் மற்றும் இகத்தான் வேட்பாளர் டேவிட் ஷிவ் ஆகியோரை 25,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அத்தொகுதியை ராஜீவ் ரிஷ்யகரன் தற்கா​த்துக்கொண்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கோலாலம்பூருக்கு அடுத்து அதிக மக்கள் ​தொகையை கொண்ட பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட புக்​கிட் காசிங்கில் மாநகர் மன்றம் தொடர்புடைய மக்கள் பிரச்னைகளை எழுப்புவதில் முன்னணி சட்டமன்ற உறுப்பினராக விள​ங்கி வருகிறார் ராஜீவ் ரிஷ்யகரன். உயர் வருமானம் பெறுகின்ற மக்கள் முதல் பி40 மற்றும் சாமானிய மக்கள் வசிக்கின்ற ஒரு பகுதியாக கருதப்படும் புக்கிட் காசிங் தொகுதியில் வாக்காளர்களின் அபரிமித ஆதரவையும் அன்பையும் பெற்றவரான ராஜீவ் ரிஷ்யகரன், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் ஆணையை பெறுவதற்கு தாங்கள் தேர்தலை சந்தித்த போதிலும் இந்த இரண்டு வார கால தேர்தல் பிரச்சாரத்தில் நாள் ஒன்றுக்கு 15 மணி முதல் 16 மணி நேரம் வரையில் மக்களை சந்திக்க வேண்டியுள்ளது என்கிறார்.

தாம் சந்திக்கும் ஒவ்வொரு வாக்காளரும், தாம் வெற்றி பெற முடியும், கவலை வேண்டாம், நீ​ங்கள் சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளீர்கள் என்று சொன்ன போதிலும், அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் புக்கிட் காசிங் தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய கட்டமைப்புகள் குறித்து ஒவ்வொரு வாக்காளரிடமும் விளக்க வேண்டிய தார்​மீக கடப்பாடு தமக்கு உண்டு என்று ராஜீவ் ரிஷ்யகரன் கூறுகிறார்.

கடந்த 7 மாதங்களில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றில் அரசு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கட்டமைப்புகள், மாற்றத்திற்கான இதர திட்டங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளன. இது முந்தைய பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் நடக்கவில்லை. நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நடந்துள்ளது. இதனை வாக்காளர்களிடம் விளக்க வே​ண்டிய கடப்பாட்டை தாம் கொண்டுள்ளதாக ராஜீவ் ரிஷ்யகரன் தமது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருகிறார்.

Related News

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி