Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்
அரசியல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

Share:

பத்து பஹாட், ஜூன்.28-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்ணியமான மற்றும் நியாயமான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீகாடிங்கில் நடைபெற்ற பாரிசான் நேஷனலின் தேர்தல் இயந்திரத் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியினர் பிரசாரப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பது, அல்லது சமூக ஊடகங்களில் அவர்களின் பிரசார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்களில் எந்தக் கட்சியும் ஈடுபடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிக்கும் சமமான முறையில் பிரசாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இறுதி முடிவை வாக்காளர்களே வாக்குப் பெட்டியில் தீர்மானிக்கட்டும் என்றும் ஸாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், பெல்டா பகுதிகளுக்குள் நுழைய பாரிசான் ஆதரவாளர்களைத் தடுக்க வேண்டாம் என்றும், பேஸ்புக், டிக்டாக் அல்லது தேர்தல் பிரசாரப் பாடல்களையும் கட்டுப்படுத்த வேண்டாம் என்றும் ஸாஹிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News