கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
வரவிருக்கும் 16-வது பொதுத் தேர்தலில் ம.சீ.ச கட்சி எந்தக் கூட்டணியுடன் இணையும் என்பது குறித்த கேள்விகளுக்கு, அக்கட்சியின் தலைவர் வீ கா சியோங் சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார். தங்களுக்குப் பல வாய்ப்புகள் இருப்பதாகவும், சரியான நேரத்தில் ஒரு முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டணி விவகாரம், வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.