Jan 11, 2026
Thisaigal NewsYouTube
கூட்டணியில் விரிசல்? 'மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்' - பெர்சத்து கட்சியைச் சீண்டிய பாஸ் இளைஞர் அணி!
அரசியல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.11-

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதில் தங்களுக்குப் பெர்சாத்து கட்சி மதிப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பாஸ் இளைஞர் அணித் தலைவர் அஃப்னான் ஹாமிமி தையிப் அஸாமுடின் கடுமையாகச் சாடியுள்ளார். ஏற்கனவே பிரதமர் வேட்பாளரைத் தன்னிச்சையாக அறிவித்த போதும், பெர்லிஸ் முதல்வருக்கு எதிராகச் செயல்பட்ட போதும் பெர்சத்து கட்சி காட்டிய 'மரியாதை' எங்கே போனது என்று அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

டான் ஶ்ரீ முஹிடின் யாசின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்தவும், புதிய தலைவரை நியமிக்கவும் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி தற்போது வலியுறுத்தியுள்ளார். "நண்பருக்கு மரியாதை கொடுத்தால் தான் பதிலுக்கு மரியாதை கிடைக்கும்" என்ற அஃப்னான் ஹாமிமியின் காட்டமான கருத்து, கூட்டணியின் இரு முக்கியக் கட்சிகளுக்கும் இடையே நிலவும் அதிகாரப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Related News

"சைஃபுடின் அப்துல்லா மீதான நடவடிக்கை நியாயமற்றது" - இந்திரா மாஹ்கோத்தா பெர்சாத்து தலைமை கண்டனம்

சபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு: கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி, லாமாக்கில் நேரடிப் போட்டி நிலவுகிறது

பேராக் பெர்சாத்து தலைவர்கள் பலருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

டாக்டர் அக்மாலிடமிருந்து ராஜினாமா கடிதத்தை அம்னோ தலைமையகம் இன்னும் பெறவில்லை

துருக்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற Order of the Republic விருது அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: பிரதமர் அன்வார் நெகிழ்ச்சி

உட்கட்சி பூசல்களைத் தவிர்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்: கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமரின் அரசியல் செயலாளர் வலியுறுத்து