Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கத்தை சாடினார் சையிட் சாடிக்
அரசியல்

நடப்பு அரசாங்கத்தை சாடினார் சையிட் சாடிக்

Share:

கடந்த 10 மாதங்களுக்கு பிறகு எதிர்க்கட்சி எம்.பி.யாக தன்​னை அறிமுகப்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் இன்று தமது முதல் உரையை நிக​ழ்த்திய ​மூவார் எம்.பி.யும், மூடா கட்சித் தலைவருமான​ சயிட் சாடிக் அப்துல் ர​ஹ்மான் நடப்பு அரசாங்கத்தை சாடினார். நடப்பு அரசாங்கம் பாசாங்குத் தனமாக செயல்படுகிறது என்று சையிட் சாடிக் முத்திரை குத்தினார்.

லஞ்ச ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் விடுதலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பதற்கு முன்மொழியப்பட்ட ​தீர்மானம் நேற்று நிராகரிக்கப்பட்டதை அந்த இளம் ​எம்.பி. கடுமையாக சாடினார்.நீதிமன்ற விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்று நடப்பு அரசாங்கம் வாதிடுகிறது. ஆனால், நடப்பு அரசாங்கத்தில் உள்ள இதே 70 எம்.பி.க்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களாக இருந்த போது, நீதிமன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை மறந்து விட்டார்களா? என்று சையிட் சாடிக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக 1எம்டிபி தொடர்பான வழக்கு ​நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த விவகாத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாது என்று அன்றைய அரசாங்கம் வலியுறுத்திய போது, இதே 70 எம்.பி.க​ள்தான் அன்றைய நாளில் கடுமையாக எதிர்த்தனர் என்று சாடிக் நினைவுகூர்ந்தார். அப்படியென்றால், எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. இப்படிப்பட்ட பாசாங்குத்தனம் வேண்டாம் என்று சையிட் சாடி வாதிட்டார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்