டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் முதுகெலும்பாக விளங்கும் பெர்சத்து கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு அக்கட்சிக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
எஸ்பிஆர்எம் மிற்கு எதிராக பெர்சத்து கட்சி செய்து கொண்ட விண்ணப்பம் அற்பமானதாக அல்லது யாருக்கும் சிரமத்தை தர வல்லதாக இல்லை என்பதால் அந்த ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நடவடிக்கைக்கு சவால் விடும் வகையில் தொடுக்கப்பட்டுள்ள பெர்சத்து கட்சிக்கு இந்த அனுமதிய வழங்குவதாக நீதிபதி அஹ்மாட் காமால் முஹமாட் ஷஹிட் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக முகைதீன் யாசின் பதவி வகித்த போது கோவிட் 19 கால கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நாட்டின் பொருளாதார மீட்சித் திட்டத்தில் பெரும் தொகையை தனது சொந்த அரசியல் கட்சியான பெர்சத்துவிற்கு மடைமாற்றம் செய்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அக்கட்சியின் சில வங்கி கணக்குளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.








