Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தெங்கு ஸாஃப்ருல் விவகாரம்: பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெங்கு ஸாஃப்ருல் விவகாரம்: பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர்

பெட்டாலிங் ஜெயா, மே.31-

அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சிக்குத் தாவியிருக்கும் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸை, ஓர் உறுப்பினராக அக்கட்சி ஏற்றுக் கொள்ளுமானால் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் ஒத்துழைப்பை அம்னோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கெடா மாநில அம்னோ தொடர்புக்குழு இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அம்னோவின் உச்சமன்ற உறுப்பினராகவும், கோத்தா ராஜா தொகுதித் தலைவராகவும் இருந்த தெங்கு ஸாஃப்ருல், அம்னோவிலிருந்து விலகி விட்டதாகவும், பிகேஆர் கட்சியில் இணையப் போவதாகவும் நேற்று அறிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் ஆட்சி அமைப்பதற்கு பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தந்து, பக்கபலமாக இருக்கும் அம்னோவைச் சேர்ந்த ஓர் உறுப்பினரை, பிகேஆர் கட்சி தனது உறுப்பினராக்கிக் கொள்ள முற்படுமானால், அந்த கூட்டணியுடன் பாரிசான் நேஷனலும், அம்னோவும் ஒட்டு உறவை வைத்துக் கொண்டு, கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

எனவே தெங்கு ஸாஃப்ருலை, தனது உறுப்பினராக பிகேஆர் ஏற்றுக் கொள்ளுமானால் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான உறவை, மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அது ஓர் அவசரத் தேவையும் கூட என்று கெடா மாநில அம்னோ தொடர்புக் குழுவின் தொடர்புத்துறை இயக்குநர் சையிட் முகமட் ஜோஹான் ரிஸால் சையிட் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →