Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமுக்கு எதிராக, அடுத்த மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அம்னோ பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மாநில அம்னோ தலைவர் ஜாலாலுடின் அலியாஸ் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், இறுதி முடிவு அம்னோ மத்திய தலைமையின் கையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில சட்டமன்றக் கூட்டமானது வரும் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்ட விவகாரத்தால் இஸ்மாயில் லாசிம் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

அந்த ஆவணத்தில் கட்டாயத்தின் பேரில் கையெழுத்திட்டதாகக் கூறிய அவர், போலீசிலும் புகார் அளித்தார்.

இருப்பினும், ஆட்சியாளரை நீக்கும் நடவடிக்கை சட்டபூர்வமானது என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, துவாங்கு முஹ்ரிஸ் இஸ்மாயில் லாசிம் தவிர மற்ற 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களையும் ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த நடவடிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி, பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →