Oct 7, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி – பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி – பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடும் என்று மலாக்கா ஜசெக தலைவர் கூ பொயே தியோங் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவருமான அவர், மாநில அளவில் ஜசெக, பிகேஆர் மற்றும் அமானா ஆகிய மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறினார். பெர்சத்து உள்ளிட்ட வேறு கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து வெளியாகும் கருத்துகள், சம்பந்தப்பட்ட தலைவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஹராப்பானின் இந்த நிலைப்பாடு, அக்கூட்டணியின் மத்திய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட கருத்துகள் பெறப்படும் என்றும் கூ தெரிவித்தார். அதேவேளை, மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பெர்சாத்துவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற ஊகத்திற்கும் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மலாக்கா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 28 தொகுதிகளுக்கு போட்டி நடைபெறுகிறது. நவம்பர் 10ஆம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவும், அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும் நடைபெறும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனங்களை ரத்து செய்வதா? முடிவை எதிர்த்து 10 பேர் வழக்கு

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனங்களை ரத்து செய்வதா? முடிவை எதிர்த்து 10 பேர் வழக்கு

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்: முக்கிய தேதிகளை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்: முக்கிய தேதிகளை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

'4 பேர் கொண்ட கும்பல்' அன்வாரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - ஹசான் காரிம் எச்சரிக்கை

'4 பேர் கொண்ட கும்பல்' அன்வாரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - ஹசான் காரிம் எச்சரிக்கை

ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான விசாரணை ஆவணங்கள் போலீசாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன –உள்துறை அமைச்சு தகவல்

ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான விசாரணை ஆவணங்கள் போலீசாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன –உள்துறை அமைச்சு தகவல்

மலாக்கா தேர்தலுக்கு முன் பெரிக்காத்தான் நேஷனலை முடக்க பெர்சத்து முயற்சி – தக்கியுடின்

மலாக்கா தேர்தலுக்கு முன் பெரிக்காத்தான் நேஷனலை முடக்க பெர்சத்து முயற்சி – தக்கியுடின்

முதுகில் குத்தும் வேலையை ஜசெக ஒருபோதும் செய்யாது” – அந்தோணி லோக்

முதுகில் குத்தும் வேலையை ஜசெக ஒருபோதும் செய்யாது” – அந்தோணி லோக்