Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டம் இல்லை – ஜலாலுடின் மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டம் இல்லை – ஜலாலுடின் மறுப்பு

நெகிரி செம்பிலான மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமுக்கு எதிராக, வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை, மாநில அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.

பெர்தாங் சட்டமன்ற உறுப்பினரான ஜலாலுடின், மாநில நிர்வாகம் சுமுகமாகச் செயல்பட்டு வருவதாகவும், தலைமைத்துவ நெருக்கடி எதுவும் இல்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் இஸ்மாயில் லாசிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து நெகிரி செம்பிலான் அம்னோ பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

அந்த முயற்சியின் அடிப்படையில், இஸ்மாயில் லாசிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைக் கொண்டு வரும் நடவடிக்கை தொடருமானால், மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலும் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →