Apr 22, 2026
Thisaigal NewsYouTube
மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சு வார்த்தைக்கு மஇகா தயார்:  டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு
அரசியல்

மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சு வார்த்தைக்கு மஇகா தயார்: டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

Share:

சுங்கை சிப்புட், ஆகஸ்ட்.02-

மஇகா மற்றும் இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்த மஇகா தனது கதவைத் திறந்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்தியர்களைத் தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட மஇகா, சமுதாயத்தின் நலனை முன் நிறுத்த வேண்டிய கடப்பாடு கொண்டு இருப்பதால் அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இது முழுக்க முழுக்க மஇகாவின் நலனைக் கருத்தில் கொண்டு கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவே தவிர எந்தவொரு நெருக்குதலாலும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

கட்சிக்குத் தலைமையேற்று இருப்பவர், கட்சியின் நன்மைக்காக முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார். எனவே இவ்விவகாரத்தில் தாம் முடிவு செய்து விட்டதால், எந்தவொரு கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மஇகா தனது கதவுகளைத் திறந்துள்ளதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இன்று பேரா, சுங்கை சிப்புட், துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் பேரா மாநிலத்தின் 79 ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!