பினாங்கு மாநிலத்தில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய ஒதுக்கீட்டைப் போல ஒரே மாதிரியான நிதி ஒதுக்கீடடை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாது என்று மாநில முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதே போன்ற நிதி ஒதுக்கீடுதான் இம்முறையும் வழங்கப்படும்.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பெறுகின்ற மானிய ஒதுக்கீட்டை விட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடாக அது இருக்கும் என்று கோம்தாரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சொவ் கொன் யொ இதனை தெரிவித்துள்ளார்.








