Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கெடா வளர்ச்சியில் கவனம் செலுத்தியும் கூட விமர்சிப்பது ஏன்? - மந்திரி பெசார் சனுசிக்கு அன்வார் கேள்வி
அரசியல்

கெடா வளர்ச்சியில் கவனம் செலுத்தியும் கூட விமர்சிப்பது ஏன்? - மந்திரி பெசார் சனுசிக்கு அன்வார் கேள்வி

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

கெடா மாநில வளர்ச்சிக்காக கூட்டரசு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அம்மாநில மந்திரி பெசார் சனுசி நூர் தொடர்ந்து விமர்சிப்பது ஏன் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில், தாய்லாந்து துணைப் பிரதமர் Anutin Charnvirakul-லுடன் இணைந்து, புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைச் சாவடியையும் தாய்லாந்தின் Sadao எல்லைச் சாவடியையும் இணைக்கும் புதிய சாலையைத் திறந்து வைத்ததாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய சாலைத் திட்டம் பெர்லிஸ், கெடா மற்றும் தெற்கு தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்றும், கூட்டரசு அரசாங்கம் கெடாவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், கூட்டரசு அரசாங்கம் எந்த மாநிலத்தையும் அரசியல் அடிப்படையில் பாகுபடுத்துவதில்லை என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், வளர்ச்சித் திட்டங்களின் பலன் அனைத்து மாநில மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே கூட்டரசு அரசாங்கத்தின் கொள்கை என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்