Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஜசெகவுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே என் மீது தாக்குதல்!" - ஜோகூரில் பிரதமர் அன்வார் ஆவேசம்
அரசியல்

ஜசெகவுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே என் மீது தாக்குதல்!" - ஜோகூரில் பிரதமர் அன்வார் ஆவேசம்

Share:

பிரதமரும் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாம் ஊழல்வாதியோ அல்லது மக்களுக்கு உதவத் தவறியவரோ அல்ல என்றும், ஜசெக கட்சியுடன் இணைந்து செயல்படுவதால் மட்டுமே தமக்கு எதிராக அரசியல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலையொட்டி புக்கிட் கம்பீர் பகுதியில் நடைபெற்ற இறுதிவட்டாரப் பிரச்சாரத்தில் பேசிய அன்வார், ஜசெக மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தார்.

மேலும், முந்தைய பிரதமரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட 1எம்டிபி ஊழல் விவகாரத்தால், அரசாங்கம் வரும் 2039-ஆம் ஆண்டு வரை 51.4 பில்லியன் ரிங்கிட் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். . தவறு செய்தவர்கள் யார் என்பதை உணர்ந்து, நாளை நடைபெறவுள்ள ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் சிந்தித்துச் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அன்வார் ருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

Related News