இந்திய சமூகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைக்க மஇகா தயாராக இருப்பதாகவும்,சாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகளுடன் தங்களால் ஒருபோதும் ஒத்துழைக்க முடியாது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மஇகா ஓர் அரசியல் கட்சி. சாதி அமைப்பு அல்ல. அரசியல் ரீதியாக உள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்க முடியும், சாதி அமைப்புகளுடன் அல்ல என்று நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தில் எந்த கட்சி, சாதி அடிப்படையில் செயல்படுகிறது, யாரை மேற்கோள்காட்டி இந்த உவமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை விக்னேஸ்வரன் விவரிக்கவில்லை என்றாலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவாக ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பதற்கு மஇகாவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சாதி அமைப்பு ஒன்றின் தலைவரை மேற்கோள்காட்டியே இந்த உவமை காட்டப்பட்டுள்ளது என்று மலேசியா கினி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!


