கோலாலம்பூர், ஜூலை.12-
அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடீன் மீண்டும் அம்னோவில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
மலேசியாவின் பிரதமராக வரும் நோக்கத்தைத் தாம் கொண்டுள்ளதாக பகிரங்கமாக அறிவித்தவரான கைரி ஜமாலுடின், கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அம்னோவின் தலைமைத்துவத்தைக் குறிப்பாக கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியைத் தொடர்ந்து குறை கூறி வந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் அம்னோவை வலுப்படுத்தும் நடவடிக்கையாக கைரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கோடி காட்டியுள்ளனர்.