பட்டர்வொர்த், ஜூலை.13-
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அம்னோவின் அரசியல் பள்ளி, இப்போது மூன்று பிரிவுகளுடன் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் குழுவில் 48 மாணவர்களும், இரண்டாவது குழுவில் 65 மாணவர்களும் பயின்று வருகின்றனர். மூன்றாவது குழுவிற்கு 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த போதிலும், 50 முதல் 60 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் என அம்னோவின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
நான்கு மாத கால இந்தக் கல்வியானது, எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத சிறப்புப் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து மலேசியர்களும் விண்ணப்பிக்கலாம், அம்னோ உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல என்றார் அவர்.