Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மூடா கட்சியின் தலைவராக சையிட் சாடிக் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூடா கட்சியின் தலைவராக சையிட் சாடிக் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.26-

லஞ்சம் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய நீதிமன்றக் குற்றச்சாட்டுகளிலிருந்து சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளதால் அவர், மீண்டும் மூடா கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூடா கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ், கட்சியின் தலைமைத்துவப் பதவியை சையிட் சாடிக்கிற்கு விட்டுக் கொடுத்து, தாம் மீண்டும் துணைத் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மூடா கட்சிக்கு சையிட் சாடிக் மீண்டும் புத்துயிர் அளிக்க முடியும். பழைய வேகத்தில் கட்சியைத் தலை நிமிரச் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் மீது ஏற்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு விட்டது. எனவே அவர் மீண்டும் மூடா கட்சிக்குத் தலைமையேற்பதில் இனி எந்தத் தடையும் இல்லை என்று அமீரா குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →