பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவரும், கெலுகோர் ஏரி நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜான், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.
காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் ஆஜராகும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வான் சைபுல் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.








