Jan 18, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது SPRM தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
அரசியல்

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது SPRM தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

Share:

அதிகார துர்ஷ்பிரயோகம், லஞ்ச ஊழல் மற்றும் சட்ட விரோத பணமாற்றம் தொடர்பாக முன்னாள் பிரதமர் tan sri முகைதீன் யாசின் இன்று பிற்பகல் 1 மணி அளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான sprm மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 11 மணி அளவில் sprm தலைமையகத்தில் வாக்குமூலம் வழங்கிய perikatan nasional கூட்டணியின் தலைவருமான முகைதீன் யாசின் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு இருப்பதை அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது.


நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்படுவதற்கு ஏதுவாக 75 வயதான முகைதீன் யாசின் sprm தலைமையகத்தில் இன்று இரவு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கோவிட்-19, பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் கூடுதல் செலவுகள் மற்றும் janawibawa மீட்சி திட்டம் தொடர்பான ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.


2019 sprm சட்டம், சட்டவிரோத பணமாற்றம், லஞ்ச ஊழல் தொடர்புடைய 6 குற்றச் சாட்டுகள் முகைதீனுக்கு எதிராக கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News